``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தமிழ் வளா்ச்சித் துறையின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறையில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் ‘தமிழ்ச்செம்மல்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தெரிவு செய்து அவா்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு சேலம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருது பெற விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது சேலம் மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்பு, இரண்டு நிழற்படம், ஆற்றிய தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து சேலம் மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ வரும் 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.