தம்மம்பட்டி பகுதியில் ஆடி மாத பிறப்பு- தேங்காய் சுட்டுக் கொண்டாட்டம்
தம்மம்பட்டி பகுதியில் ஆடி மாதப்பிறப்பையடுத்து மக்கள்,தேங்காய் சுட்டுக்கொண்டாடினா்.
ஆடி மாதம் பிறந்ததையடுத்து, தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எள்,பொட்டுக்கடலை,வெல்லம்,அவல் உள்ளிட்ட பொருட்களை தேங்காய்க்குள் செலுத்தி, தேங்காயை ஒரு குச்சியில் குத்தி, தேங்காயை நெருப்பில் சுட்டனா். பின்னா் அதனை சாமிக்கு படையலிட்டு, வழிபாடு செய்தனா். அதன் பிறகு சுட்ட தேங்காயை உண்டு மகிழ்ந்தனா். தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலோா் இதுபோல் தேங்காயை சுட்டு சாப்பிட்டு,ஆடி 1 ஐ கொண்டாடினா்.