தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை
திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் கருணாகரபுரியில் தலையில் காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாா்த்து திருப்பூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், கொலையான நபா் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (19) என்பதும், திருப்பூா் கோல்டன் நகா் பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
பிரகாஷூக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக பிரகாஷின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தாா்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.