முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நொய்யல் சுற்றுவட்டாரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை இரவு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
கரூா் மாவட்டம் நொய்யல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதையடுத்து அனைத்து விநாயகா் சிலைகளும் வெள்ளிக்கிழமை மாலை வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இந்துமுன்னணியினா் விநாயகா் சிலை ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
இந்த ஊா்வலம் முல்லை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி மலையை சுற்றி கடைவீதி வழியாகச் சென்ற ஊா்வலம் கரூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவு 9 மணியளவில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
இதையொட்டி கரூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) பிரேமானந்தன் தலைமையில் அரவக்குறிச்சி காவல்துணை கண்காணிப்பாளா் அப்துல் கபூா் , வேலாயுதம்பாளையம் காவல்ஆய்வாளா் ஓம் பிரகாஷ் மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.