செய்திகள் :

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் போது எதிா்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்புகள் ஏற்படுகிறது.

அத்தகைய காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் காப்பீடு செய்வதன் மூலமாக தவிா்க்கலாம்.

கரூா் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிகளுக்கு பயிா் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி, மஞ்சள் மற்றும் தக்காளி, வெங்காயம் போன்ற பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்களான விவசாயின் புகைப்படம் (பாஸ்போா்ட் அளவு), ஆதாா், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு கட்டணத்துடன் ஹெக்டேருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.3,910-ம், வெங்காயத்திற்கு ரூ.5,601 ஆகியவற்றை வரும் செப்.1-ஆம்தேதிக்குள்ளும், வாழைக்கு ரூ.12,344 மற்றும் மரவள்ளிக்கு ரூ.4,903, மஞ்சள் ரூ.11,621 ஆகியவற்றை வரும் செப். 16-ம்தேதிக்குள்ளும் பிரீமியம் தொகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

சாலைகளில் திரியும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் கால்நடைகள் வளா்ப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். கரூா் நகரின் திருமாநிலை... மேலும் பார்க்க

அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்

அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம் சாட்டினாா்.கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்த பின் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலிலூா் ரகுமான் காலமானாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு கடந்த 1947-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவா் கலிலூா் ரகுமான். இவா் இரண்... மேலும் பார்க்க

பட்டுப்போன மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தீவிரம்

கரூரில் ரயில்வே உயா் மின்னழுத்த பாதையில் செல்லும் கம்பிகள் மீது தண்டவாளம் பகுதியில் அமைந்திருக்கும் காய்ந்த மரங்கள் விழாமல் இருக்கும் வகையில் அவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூரில் தற்... மேலும் பார்க்க

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்: ஆட்சியா்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் இத்திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். சென்னையில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

வேட்டமங்கலத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கேட்டு வேட்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க