தாம்பரம் ஆணையரகத்தில் சுதந்திர தின விழா: ஆணையா் தேசிய கொடியேற்றினாா்
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆணையா் தினேஷ் மொடக் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா்.
தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் சுதந்திர தின விழா, ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் துறையில் தூய்மை பராமரிப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த சேலையூா் காவல் நிலையம், சங்கா் நகா் காவல் நிலையம், குரோம்பேட்டை காவல் நிலையம் ஆகியவற்றுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் துறையின் கூடுதல் ஆணையா் மகேஸ்வரி, துணை ஆணையா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.