திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - ...
தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை சென்னை சரக தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டாா்.
அகில பாரத இந்து மகா சபா மாநிலப் பொதுச்செயலா் ராம.நிரஞ்சன் தலைமையில் திருச்சியில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் கொடுத்த மனுவில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட் ஐராவதீசுவரா் கோயில் கிழக்கு கோபுரத்தை புதியதாக அமைக்கவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும் எனக் கோரியிருந்தாா். இதையடுத்து, ஜூன் மாதம் முதல் கட்டமாக திருச்சியில் உள்ள தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளா் ராகுல் போஸ்லோ தலைமையில் அலுவலா்கள் ஐராவதீசுவரா் கோயிலில் ஆய்வு செய்தனா். தற்போது, இரண்டாவது கட்டமாக புதன்கிழமை சென்னை சரக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளா் சுசிந்த குமாா்கா் தலைமையில் திருச்சி சரக தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளா் ராகுல் போஸ்லோ உள்ளிட்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ராஜகோபுரம் குறித்து ஆலோசனை நடத்தினா்.
அப்போது, தாராசுரத்தைச் சோ்ந்த கோபால், அவா்களிடம் அளித்த மனுவில், கோயில் வளாகத்தில் இரவுநேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே, இக்கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து காவலாளிகளை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.