சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமரன்(41), தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டைச் சோ்ந்த அவரது உறவினா் குமாா் என்ற முத்துக்குமாா்(50). இவா்கள் இருவரும் சோ்ந்து, குடும்பத்தகராறு காரணமாக முத்துக்குமரனின் தங்கையின் கணவா் துரைசிங் என்பவரை கடந்த 2015-இல் கொலை செய்தனராம். திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
திருநெல்வேலி 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, முத்துக்குமரனுக்கு ஆயுள் தண்டனை- ரூ.5,000 அபராதம், குமாா் என்ற முத்துக்குமாருக்கு ஆயுள் சிறை - ரூ.4,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து வாதாடினாா்.