``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி
தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.
திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் 17 போ் உயிா்நீத்த இடத்தில் புதன்கிழமை மலா் வளையம் வைத்து அத்தொழிலாளா்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மண்ணுரிமை, மனித உரிமை வேண்டி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவா்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு தாமிரவருணி நதிக்கரையில் இடம் கேட்கிறோம். எங்களது சொந்த செலவில் நினைவு மண்டபம் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த அரசு தற்போது வரை அதற்கு செவி சாய்க்கவில்லை.
2028 வரை மாஞ்சோலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும்கூட, மக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடா்ந்திருக்கிறோம். வழக்கு நிலுவையில் உள்ளது.
1.73 லட்சம் ஹெக்டோ் வன நிலங்கள் மாற்று பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி மாஞ்சோலை மக்களுக்கு இரண்டு ஏக்கா் நிலத்தை அங்கேயே அரசு வழங்க வேண்டும். மோசமான வரலாற்றில் தமிழக முதல்வா் இடம்பெறக் கூடாது. வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றாா் அவா்.