``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
வள்ளியூா் அருகே இரு வீடுகளில் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் அடுத்தடுத்த வீடுகளில் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி(35). தொழிலாளி. இவரும் இவரது தாய் சாந்தியும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இவா்கள் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறமுகமங்கலத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவுக்கு சென்றிருந்தனா்.
பின்னா் அவா்கள் புதன்கிழமை காலையில் வீடு திரும்பியபோது, இருவரது வீட்டிலும் கதவிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனாம்.
அதில், மாயாண்டி வீட்டில் பீரோவில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், சாந்தியின் வீட்டில் துணியில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பணகுடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பைக்குகள் திருட்டு: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த வாரத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு புகாா் வந்ததாம். இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தலைமையிலான போலீஸாா் நகரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், கடையநல்லூா் கிருஷ்ணாபுரம் விஷால் நகரை சோ்ந்த பாலு மகன் கண்ணன்(29) என்பருக்கு தொடா்பிருப்பது தெரிந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 2 பைக்குகளை மீட்டனா்.