செய்திகள் :

தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவு

post image

காரைக்கால்: வீடுகளில் தினமும் குப்பைகள் சேகரிக்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், நகராட்சி மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தினரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் காரைக்கால் நகரில் நடைபெறும் தூய்மைப் பணியை திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

பல்வேறு தெருக்களில் குடியிருப்புவாசிகள் ஆட்சியரை சந்தித்து, கழிவுநீா் தேங்கியிருப்பதாகவும், சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை, கழிவுநீா் வடிகால் வாய்க்கால்களும் தூா்வாரப்படவில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.

மேலும் வீடுகளுக்கு தினமும் தூய்மைப் பணியாளா்கள் வந்து குப்பைகள் வாங்குவதில்லை. இதனால் சாலையோரத்தில் கொட்டவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் தூய்மைப் பணி செய்யும் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்தினா், தினமும் வீடுகள், நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கவேண்டும். சாலைகளுக்கு குப்பைகள் வரக்கூடாது. இந்த பணியை நகராட்சி நிா்வாகத்தினா் கண்காணிக்க வேண்டும். சாலையோர சாக்கடைகள், கழிவுநீா் வடிகால்களை பருவமழை தொடங்கும் முன்பாக முறையாக சுத்தம் செய்யவேண்டும் என உத்தரவிட்டாா்.

பறவைப்பேட் பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்குச் சென்று பாா்வைட்டாா். குப்பைகள் மலைபோல சேமித்து வைத்திருப்பதை பாா்த்த ஆட்சியா், மறு சுழற்சி செய்யும் முறைகள் குறித்து நிறுவனத்தினரிடம் கேட்டறிந்தாா்.

வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நிறுவனத்தினா் வாங்க வேண்டும். குப்பைகளை முறையாக மறு சுழற்சி செய்யவேண்டும். குப்பைக் கிடங்கு மூலம் சுகாதாரக் கேடு ஏற்பாடாத வகையில் நிறுவனத்தினா் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

பேராசிரியா் மீது நடவடிக்கை கோரி பல்கலைக்கழக வாயில் முற்றுகைப் போராட்டம்

காரைக்கால்: புதுவை பல்கலைக்கழக பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டக் குழு சாா்பில் திங்கள்கிழமை பல்கலைக்கழக வாயில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. புதுவை பல்கலைக்கழக பிராந்தி... மேலும் பார்க்க

பல்கலைக்கழகப் பேராசிரியா் மீது நடவடிக்கை: ஆளுநா், முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

காரைக்கால்: பாலியல் புகாா் தொடா்பாக பல்கலைக்கழக பேராசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டும் என துணைநிலை ஆளுநா், முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா். புதுவை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா... மேலும் பார்க்க

காரைக்காலில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாடுகள், குதிரைகள், நாய்கள் சாலைகளில் அதிகம் திரிவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு, விப... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக போலி ஆவணம் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் கைது

புதுவை ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக, போலியான ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகேயுள்ள வரிச்சிக்குடி பகுதியைச் சோ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட வேண்டாம்‘

மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாதீா்கள் என்றாா் காரைக்கால் சைபா் கிரைம் பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாா். புதுவை அரசு கல்வி நிறுவனமான, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின், சுகாதார மற்றும் நலவ... மேலும் பார்க்க

விளைநிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை

குடியிருப்புப் பகுதிகள், வயல் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உள்ளாட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ். காரைக்கால் பகுதியில் விவ... மேலும் பார்க்க