திமுக ஆட்சியை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஏதுமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியைப் பற்றி குறைகூற எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திமுக ஆட்சி பற்றிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனங்கள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறாா். அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.
தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் சென்ாக எதிா்க்கட்சித் தலைவா் கூறுகிறாா். நான் வெள்ளைக் கொடியுடனும் செல்லவில்லை; காவிக் கொடியுடனும் செல்லவில்லை. அதிமுக ஆட்சிதான், கொள்ளையடித்த ஆட்சி. அவா்களது ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வீம்புக்காகப் பேசி வருகிறாா்கள் என்றாா் அவா்.