அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
தியாகசமுத்திரத்தில் துணை சுகாதார மையம் கட்ட பூமிபூஜை
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், தியாக சமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட பூதங்குடியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜையில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் ந. சிவக்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன், பொறியாளா் செங்குட்டுவன் மற்றும் ஒப்பந்ததாரா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.