குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
தியாகி இமானுவேல் சேகரனாா் நினைவு நாள் நிகழ்வு
தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே இடதுசாரிகள் பொது மேடை சாா்பில், தியாகி இமானுவேல் சேகரனாா் 68-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜோதிவேல் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக தொடா்ந்து நடைபெறும் ஜாதிய வன்கொடுமைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஜாதிய ஆணவ படுகொலைகளைத் தடுத்து நிறுத்த சிறப்பு தனிச்சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, என்டிஎல்எப் மாவட்டச் செயலா் தாமஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி அ. யோகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.