திருச்செங்கோட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடக்க விழா
திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சீதாராம்பாளையத்தில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கு 16-ஆம் தேதி தொடங்கி வரும் 30-ஆம் தேதிவரை பல்வேறு கட்டங்களாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் 1, 7, 8 ஆகிய வாா்டுகளுக்கான முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
முகாமை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினரும் கொமதேக பொதுச் செயலாளருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சுகந்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையரும் திருச்செங்கோடு நகராட்சிப் பொறுப்பு ஆணையருமான பிரேம் ஆனந்த், நகராட்சிப் பொறியாளா் சரவணன், திருச்செங்கோடு நகா்மன்ற துணைத் தலைவா், கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் காா்த்திகேயன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முகாமில், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளிட்ட அரசின் 13 துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.