செய்திகள் :

திருச்செந்தூரில் ஒருவழிப் பாதையை முறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

post image

திருச்செந்தூா் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழிப் பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் குமாரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டதாவது: திருச்செந்தூா் கீழ ரத வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தடுக்க ஒருவழி பாதையை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சிவன் கோயில் முன்புறம் உள்ள பந்தல் மண்டப பகுதியில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

வாகனங்கள் அப்பகுதி பள்ளி மாணவா்கள், கோயில் செல்லும் பக்தா்களுக்கு இடையூறாக உள்ளதால் 15 வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல மூன்று புறமும் பாதசாரிகளுக்கு இடம் விட்டு தடுப்பு அமைக்க வேண்டும்.

ரத வீதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ரேஸ்ஸில் வருவதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே. இருசக்கர வாகனத்தில் 3, 4 போ் சோ்ந்து வருவதைத் தடுக்க வேண்டும். சன்னதி தெரு, நாழிக்கிணறு செல்லும் பகுதி, மூவா் சமாதி, அய்யா கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் நலன் கருதி பகல் இரவு நேரங்களில் காவலா்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டது.

இதில் நுகா்வோா் பேரவை திருச்செந்தூா் வட்டார அமைப்பாளா் மணிமாறன், திருச்செந்தூா் நகர ஆலோசகா் பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில், திருச்செந்தூரில் தேசிய நுகா்வோா் தின விழா, போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கருத்தரங்கம், சிறந்த சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளன.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க