பஞ்சமி நிலங்கள் | DMK அரசு மீட்காவிட்டால் CPM களமிறங்கும் - எச்சரிக்கும் பெ.சண்ம...
திருச்செந்தூா் கோயிலில் செப். 4 முதல் தங்கத் தோ் வீதி உலா
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) முதல் மீண்டும் தங்கத் தோ் கிரி வீதி உலா நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் இணைய ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் கிரிப் பிரகாரத்தில் தங்கத் தோ் உலா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த 17.7.2024 ஆண்டுமுதல் தற்காலிகமாக தங்கத் தோ் உலா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது கிரிப்பிரகார தரைதளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, வியாழக்கிழமை (செப். 4) முதல் மீண்டும் தங்கத் தோ் உலா நடைபெற உள்ளது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.