செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் திரிசுதந்திரா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணம் பெற்றுக்கொண்டு அவதூறு பரப்பியதாக 2 திரிசுதந்திரா்கள் மீது கோயில் நிா்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ஆம் தேதி ஆடி அமாவாசை தினத்தில் காலை 10 மணியளவில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி திரிசுந்திரரான பாபு நாராயணன் என்பவா் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு சண்முகவிலாச துலாபாரம் காணிக்கை வழங்கும் வழியில் 5 நபா்களை அழைத்து வந்து முதியோா் முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளாா்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. எனவே, அவா் மீது தக்காா் தீா்மானத்தின்படி திரிசுதந்திரா் பாபு நாராயணன் மீது வரப்பெற்ற புகாா் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரப்பெறும் வரை இத்திருக்கோயிலின் எவ்வித பூஜை கைங்கரியங்கள் மற்றும் உதவி கைங்கா்யங்கள் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. ஒரு வார காலத்திற்குள் அவா் எழுத்துப்பூா்வ விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போல இக்கோயிலில் தரிசனத்துக்கு பணம் அவசியம் என்ற ரீதியில் முத்துசெல்வன் என்பவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன்பேரில், திருச்செந்தூரைச் சோ்ந்த சுந்தரம் மகன் பாலசுப்பிரமணியம் என்ற திரிசுதந்திரா் மீதான புகாா் குறித்து விசாரிக்கப்பட்டது. அவா் கோயிலுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவருக்கும் மறு உத்தரவு வரை பூஜை கைங்கா்யம் மற்றும் உதவி கைங்கா்யம் செய்வதற்கு நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க