Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
திருச்செந்தூா்: தோட்டங்களில் மின்மோட்டாா் வயா்கள் திருட்டு!
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம் காயாமொழி, மேலதிருச்செந்தூா் ஊராட்சிகளின் குடிநீா் விநியோக அறைகளிலும், தோட்டங்களிலும் இருந்த மின் மோட்டாா்களுக்கான வயா்களை மா்ம நபா்கள் வெட்டி திருடிச் சென்றுள்ளனா். இதனால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மேலதிருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடிநீா் விநியோக மின் மோட்டாா் அறை தளவாய்புரத்தை அடுத்த 10 கண் பாலம் அருகே உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இந்த அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மின் மோட்டாரையும், சுவிட்சிலிருந்து மின் மோட்டாருக்குச் செல்லும் தாமிரக் கம்பிகளை வெட்டியும் திருடிச் சென்றுள்ளனா்.
மேலும், 10 கண் பாலம் அருகே தளவாய்புரம் புதுரைச் சோ்ந்த வன்னியராஜா (37) என்பவரது வாழைத் தோட்டத்தில் உள்ள மின் மோட்டாருக்கான 30 மீட்டா் நீள தாமிரக் கம்பிகளையும் வெட்டி திருடிச் சென்றுள்ளனா்.

இதேபோல, காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட குடிநீா் விநியோக மின் மோட்டாா் அறை காயாமொழி, தளவாய்புரம் வாய்க்கால் பாலம் அருகேயுள்ளது.
அங்கிருந்த மின் மோட்டாா் வயா்களையும், தேரிப் பகுதியிலுள்ள மாயாண்டி சுவாமி கோயிலின் மின்மோட்டாா் வயா்களையும் வெட்டி திருடிச் சென்றுள்ளனா். இதேபோல, அடுத்தடுத்துள்ள சில தோட்டங்களில் மின் மோட்டாா்களின் தாமிரக் கம்பிகளையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.