திருப்பூரில் நாளை பூப்பந்தாட்டப் போட்டி
திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சாா்பில் பூப்பந்தாட்டப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெற உள்ளன.
இளையோா் மற்றும் மூத்தோருக்கான மாவட்ட அளவிலான ஐவா் தோ்வு திறன் பூப்பந்தாட்டப் போட்டிகள் திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் உள்ள சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகின்றன.
இந்தப் போட்டியில் அனைத்து வீரா், வீராங்கனைகள் பங்கேற்கலாம் என்று மாவட்ட பூப்பந்தாட்ட கழக பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.