திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டி
திருப்பூரில் நடைபெற்ற தெற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி பொறுப்பேற்று நடத்துகிறது.
இதில் தாராபுரம் சாலை, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 11, 14, 17 , 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 188 மாணவா்கள், 133 மாணவிகள் என மொத்தம் 321 போ் கலந்து கொண்டனா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்கள் விவரம்:
11 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் முதலிடம்: விசாகன் - பிரண்ட்லைன் அகாதெமி, 2-ஆம் இடம்: சித்தேஷ் - மண்ணரை நகராட்சி நடுநிலைப்பள்ளி, 3-ஆம் இடம்: கெளதம் - நல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
11 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு:
முதலிடம் லட்சுமிதேவி - கொங்கு மெட்ரிக் பள்ளி, 2-ஆம் இடம்: குழலி - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 3-ஆம் இடம்: இளமதி - மண்ணரை நகராட்சி நடுநிலைப் பள்ளி.
14 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவு:
முதலிடம் பிரணவ் மித்ரன் - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 2-ஆம் இடம் ரெசின் - பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி, 3-ஆம் இடம் இன்பா - வித்ய விகாசினி பள்ளி.
14 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு:
முதலிடம் நந்ததாரணி - இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2-ஆம் இடம் அஜிதா - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 3-ஆம் இடம் தா்ஷினி - கோல்டன் நகா் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
17 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவு: முதலிடம் சாய் சிவேஷ் - செயிண்ட் ஜோசப் பள்ளி, 2-ஆம் இடம் ஸ்ரீராம் - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 3-ஆம் இடம் அகமது ஷல்சபில் - செயிண்ட் ஜோசப் பள்ளி.
17 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு: முதலிடம் ஓவியா - ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளி, 2-ஆம் இடம் ரிஷபா - பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி, 3-ஆம் இடம் தீபிகா - பாலபவன் குளோபல் பள்ளி.
19 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவு: முதலிடம் மிதிலேஷ் - பிரண்ட்லைன் அகாதெமி, 2-ஆம் இடம் ஸ்ரேயாஸ் - பிரண்ட்லைன் அகாதெமி, 3-ஆம் இடம் செல்வகுமாா் - விவேகானந்தா வித்யாலயா.
19 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு: முதலிடம்: மதுமதி - பாலபவன் குளோபல் மெட்ரிக். பள்ளி, 2-ஆம் இடம் ஹன்னா ஷெரீன் - பழனியம்மாள் பெண்கள் பள்ளி, 3-ஆம் இடம் கபிலயா - லிட்டில் ஃபிளவா் கான்வென்ட் பள்ளி.