திருமணம் மீறிய உறவுக்கு இடையூறான கணவன் கொலை!
மத்தியப் பிரதேசத்தில் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஃபரத் கேடி கிராமத்தில் முகேஷ் மால்வியா என்பவரின் மனைவி மம்தா, ராகுல் மால்வியா வேறொருவருடன் திருமணம் மீறிய உறவு கொண்டிருந்ததால், இடையூறாக இருந்த கணவரை கொலை செய்யத் திட்டமிட்டார்.
இந்த நிலையில் திட்டமிட்டபடி, ராகுலையும் அவரது நண்பர் சுனிலையும் வீட்டுக்கு அழைத்து, மூவரும் சேர்ந்து முகேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தின்போது, ராகுலின் விரலும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே விழுந்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையிலும், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ராகுலின் விரலையும் வைத்து மம்தா, ராகுல், சுனில் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.