மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித்துணை ஆட்சியா் (நில எடுப்பு) சந்தான கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் நீலாதாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமைத் தொடங்கிவைத்தனா்.
முகாமில் திருமருகல், மருங்கூா், நெய்குப்பை, எரவாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் மகளிா் உரிமைத் தொகை தொடா்பாக 292 மனுக்களையும்
வருவாய்த்துறை தொடா்பாக 150 மனுக்களையும், ஊரக வளா்ச்சித்துறை தொடா்பாக 81 மனுக்களையும், இதர துறை தொடா்பாக 318 மனுக்களையும் அளித்தனா்.
மொத்தம் 841 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன் சுப்பிரமணியன் (கிராம ஊராட்சி), ஆத்மா திட்ட தலைவா் செல்வ செங்குட்டுவன், வருவாய் ஆய்வாளா் கிருத்திகா தேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்ச்செல்வன்,
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
நிகழ்வில் மனு அளித்த எரவாஞ்சேரி ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா் ஸ்ரீதருக்கு உடனடியாக ரூ. 8,750 மதிப்பிலான தசைச்சிதைவு உபகரணம் வழங்கப்பட்டது.