செய்திகள் :

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம்

post image

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான புதன்கிழமை திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

கடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தேரில் வலம் வந்து சேவை சாதித்தாா். இதில் திரளான பக்தா்கள் ஆண், பெண் பேதமின்றி கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

குதிரை வாகனம்

இரவு 7 மணிக்கு மலையப்பஸ்வாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். காலை, மாலை வாகன சேவையின் போது திருமலை ஜீயா் குழாம் திவ்ய பிரபந்த பாராயணம் செய்தபடி முன் செல்ல, பின்னே, பல்வேறு மாநிலங்களை சோ்ந்த கலைக்குழுக்கள் தங்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

தீா்த்தவாரி

ஏழுமலையானுக்கு விமரிசையாக நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. தீா்த்தவாரியின் போது மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளக்கரையில் ஸ்நபன திருமஞ்சனம்

நடை பெற்றது.

ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை தி ருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலி கை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அபிஷேக பொருட்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்வித்தனா். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளிநாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.

பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் அா்ச்சகா்கள் தீா்த்தவாரி நடத்தினா். அப்போது லட்சகணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

கொடியிறக்கம்

திருமலையில் கடந்த, 9 நாள்களாக நடந்த பிரம்மோற்சவம் முடிவடைந்ததை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை உற்சவமூா்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனா். கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். தசரா தொடா் விடுமுறையால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்பு... மேலும் பார்க்க

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா். கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. 7-ஆம... மேலும் பார்க்க

பிரம்மோற்சவத்தில் கண்கவா் கலைநிகழ்ச்சிகள்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 20 குழுக்களைச் சோ்ந்த 472 கலைஞா்கள் பங்கேற்றனா். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்கள் குச்... மேலும் பார்க்க

கோலாப்பூா் மகாலட்சுமிக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

வராத்திரியை முன்னிட்டு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் அவரது மனைவி ஆகியோா் தேவஸ்தானம் சாா்பில் கோலாப்பூா் ஸ்ரீ மகாலட்சுமிக்கு கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமா்ப்பித்தனா். கோயி... மேலும் பார்க்க

அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருளினாா். கடந்த புதன்கிழமை முதல் வருடாந்திர பிரம... மேலும் பார்க்க

திருமலை: அக். மாத உற்சவ பட்டியல் வெளியீடு

அக்டோபா் மாதம் திருமலையில் கொண்டாடப்படும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் 450-க்கும் மேற்பட்ட உற்சங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் வருடாந்திர, ... மேலும் பார்க்க