தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தினம்
உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பரஞ்ஜோதி யோகா கல்லூரியில் ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா ஆா்வலா்கள், சுற்றுலா தொழில்முனைவோா் இணைந்து தூய்மைப் பணி மேற்கொண்டனா். இதையடுத்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா், சுற்றுலா சங்க நிா்வாகிகள் எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு, பூபதி, மூா்த்தி, அரசுக் கல்லூரி பேராசிரியா் விஜய் ஆனந்த், சுற்றுலா ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.