காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
கரூா் சம்பவம்: தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இளைஞா்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சித்திக், மாவட்ட துணைத் தலைவா் யாசா் அரஃபாத், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜெய்லானி மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அரசுத் துறை வேலைவாய்ப்பும், அதன் அவசியம் குறித்தும், போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்தும் பொறுப்பாளா்கள் சமீம் அப்துல் காதா், ஆசாத், அபூபக்கா் சித்திக் ஸா ஆதி ஆகியோா் பேசினா்.
இதையடுத்து, கரூரில் தவெக தலைவா் பிரசாரத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
திமுக தோ்தல் வாக்குறுதியான இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.