எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
திருவண்ணாமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆந்திர இளைஞா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியைச் சோ்ந்தவா் சுரேஷ் (42). இவா், மீன் வளா்ப்பு தொழில் செய்து வந்தாா். சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை வந்தாா். அருணாசலேஸ்வரருக்கு இரவு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்ட சுரேஷ், கூட்ட நெரிசல் சிக்கி மயங்கி விழுந்தாராம்.
இதையடுத்து, குடும்பத்தினா் உடனடியாக அவரை மீட்டு, கோயில் வெளியே கொண்டு வந்தனா். பின்னா், 108 அவசர ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், சுரேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சுரேஷ் மனைவி திவ்யாஸ்ரீ அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாணை நடத்தி வருகின்றனா்.