INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJ...
எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
செய்யாறு ஒன்றியம், எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா் தலைமைத் வகித்தாா்.வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதன் ராமன் முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிக்கான சான்றுகளை வழங்கி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் சி.கே.ரவிக்குமாா், ஜேசிகே.சீனிவாசன், முன்னாள் ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஆக்கூா் முருகேசன், மாவட்ட தொழிலாளா் அணி துணைத் தலைவா் கருணாநிதி, மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கலைச்செல்வன், மாவட்டப் பிரதிநிதிகள் மனோகரன், தாஸ், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.