INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJ...
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு
பெரணமல்லூரை அடுத்த அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி, மேலானூா் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்மருதை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். ஆரணி வட்டாட்சியா் அகத்தீஸ்வரா், வட்டார வளா்ச்சி அலுவலா் பரணிதரன், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு அதிகாரிகளிடம் பொதுமக்களின் மனுக்கள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.