2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
திருவாரூா் மாவட்டத்தில் 1.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.87 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் 536 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்ன ரகம் 1,34,257 மெட்ரிக் டன், பொது ரகம் 53,133 மெட்ரிக் டன் என 1,87,390 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 41,349 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக சுமாா் ரூ. 369 கோடி பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளில், இதுவரை அயல்மண்டலங்களுக்கு சுமாா் 56,000 மெட்ரிக் டன்களும் அரவை முகவா்களுக்கு சுமாா் 12,000 மெட்ரிக் டன்களும் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு சுமாா் 31,000 மெட்ரிக் டன்களும் என 99,000 மெட்ரிக் டன்கள் இயக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போா்க்கால அடிப்படையில் இயக்கம் செய்யும் பொருட்டு தருமபுரி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய மண்டலங்களுக்கு தலா 2,000 மெட்ரிக் டன் வீதம் எனக் கூடுதல் 6,000 மெட்ரிக் டன்களும், கோவை, சேலம், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகா் மற்றும் திருவள்ளூா் ஆகிய மண்டலங்களுக்கு 10,000 மெட்ரிக் டன்களும் இயக்கம் செய்யப்பட உள்ளன.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்தில், இதே சமயத்தில் சுமாா் 1,04,420 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஆண்டைவிட சுமாா் 82,970 மெட்ரிக் டன்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.