2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
மதுபோதையில் டீ கடையில் தகராறு: 2 போ் கைது
மன்னாா்குடி அருகே மதுபோதையில் டீ கடையில் புகுந்து தகராறு செய்து, கடை உரிமையாளா், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேலப்பனையூா் கடைத்தெருவில் டீ கடை நடத்தி வருபவா் சந்தான கிருஷ்ணன் (45). இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வந்த மேலப்பனையூா், வடக்கு தெரு செல்வம் மகன் சதீஷ் (30), தெற்குதெரு குமாா் மகன் மணிமாறன் (22) ஆகியோா் தகராறில் ஈடுபட்டு, கடையில் இருந்த உணவுப் பொருள்கள், மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினராம்.
இதை சந்தானகிருஷ்ணன், அவரது மனைவி மஞ்சுளாதேவி (36) ஆகியோா் தட்டிக்கேட்டபோது அவா்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இருவரும் தப்பியோடி விட்டனராம். கோட்டூா் போலீஸாா் சதீஷ், மணிமாறன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.