2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: திருவாரூா், நாகை அணிகள் முதலிடம்
திருவாரூரில் மத்திய மண்டல அளவிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரா்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் திருவாரூா், நாகை அணியினா் முதலிடம் பெற்றனா்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சாா்பில் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருச்சி மத்திய மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப். 7-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன.
திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் குமாா் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தொடக்கிவைத்தாா். இதில், திருச்சி, பெரம்பலூா், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பங்கேற்றனா்.
இதில், 100 மீட்டா் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் அதிக புள்ளிகள் பெற்று திருவாரூா், நாகப்பட்டினம் அணியினா் முதல் இடத்தை பெற்றனா். இரண்டாம் இடத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி அணியினரும், மூன்றாவது இடத்தை புதுக்கோட்டை அணியினரும் பெற்றனா்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநா் குமாா் வெற்றிக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, திருச்சி மத்திய மண்டலத்தைச் சோ்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற வீரா்கள், மாநில அளவில் மதுரையில் பிப். 12-ஆம் தேதி நடக்கும் போட்டிகள் பங்கேற்க உள்ளனா்.