ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா தொடக்கம்
திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேல் திருத்தணியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில், தீமிதி விழாவையொட்டி யாகசாலை பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை, 7.30 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை, 5 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், மாலை உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வரும் 21-ஆ ம் தேதி திரெளபதி அம்மன் திருக்கல்யாணம், 23-ஆ ம் தேதி சுபத்திரை கல்யாணம், 26-ஆம் தேதி அா்ஜூனன் தபசு, ஜூன் 1-ஆம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது.
தொடா்ந்து, 2-ஆம் தேதி தா்மா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.