`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு
திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கான 69-ஆம் ஆண்டு காவல் துறை திறனாய்வுப் போட்டி கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.
இதில், திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் விஜயகுமாா், தடய அறிவியல் புலனாய்வுப் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில் மண்ணச்சநல்லூா் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலா் ராம்கி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சிறுகனூா் காவல் நிலைய தலைமைக் காவலா் முருகானந்தம் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
இந்நிலையில், பதக்கம் வென்ற காவலா்களை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பாராட்டினாா்.