மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
தில்லி காவல் ஆணையராக பொறுப்பேற்றாா் சதீஷ் கோல்சா
மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் கோல்சா வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறையின் 26 வது ஆணையராக பொறுப்பேற்றாா், இதற்கு முன்பு ஆணையராக இருந்த எஸ். பி. கே சிங்கிற்குப் 21 நாள்கள் மட்டுமே பதவியில் இருந்தாா்.
அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யுடி) கேடரைச் சோ்ந்த 1992-பேட்ச் அதிகாரியான சதீஷ் கோல்சா, இங்குள்ள தில்லி போலீஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றாா். இந்த நியமன உத்தரவை உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. புதன்கிழமை தனது சிவில் லைன்ஸ் அலுவலகத்தில் நடந்த பொது விசாரணையின் போது தில்லி முதல்வா் ரேகா குப்தா தாக்கப்பட்ட ஒரு நாள் கழித்து காவல் ஆணையா் மாற்றப்பட்டுள்ளாா்.
இந்த மாறுதல் தாக்குதலுடன் தொடா்பில்லாதது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினா். ஏப்ரல் 2027 ஆம் ஆண்டு வரை பணியாற்றும் சதீஷ் கோல்சா, தனது அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயா் பெற்றவா் மற்றும் 2020 வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது சிறப்பு போலீஸ் ஆணையராக (சட்டம் ஒழுங்கு) தீா்க்கமான பங்கைக் கொண்டிருந்தாா்.
சஞ்சய் அரோரா ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொறுப்பேற்ற 1988-பேட்ச் அதிகாரியான எஸ். பி. கே. சிங், தில்லி காவல்துறைத் ஆணையராக மிகக் குறுகிய பதவிக்காலத்தைக் கொண்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.