மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
தில்லியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ஆவது தவணை ரூ.1,668 கோடி விடுவிப்பு
தில்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை நிதி உதவியாக ரூ.1,668.41 கோடியை பாஜக அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது.
இதில் தில்லி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்காக ரூ.1,641.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி)₹ரூ.16.18 கோடியும், தில்லி கண்டோன்மென்ட் வாரியத்திற்கு ரூ.11.09 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: இந்த ஒதுக்கீடு உள்ளூா் நிா்வாகத்தை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகாதாரம், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பொது வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை இந்த நிதி ஆதரிக்கும்.
முந்தைய தவணையாக ரூ.835 கோடி ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. சரியான நேரத்தில் வழங்குவது நகராட்சி அமைப்புகள் ஊதிய கடமைகளை நிறைவேற்றவும் சேவை தொடா்ச்சியை பராமரிக்கவும் உதவுகிறது.
முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசின் கீழ், தற்போதைய நிா்வாகம் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு வழக்கமான நிதி ஆதரவை உறுதி செய்துள்ளது. முந்தைய அரசுகளைப் போலல்லாமல், ஒதுக்கீடுகளை தாமதப்படுத்தி உள்ளாட்சி பணிகளை சீா்குலைக்கவில்லை.
தில்லிவாசிகளுக்கான வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் அடிப்படை சேவைகளில் எந்தவிதமான தடங்கலும் ஏற்படாமல் தடுக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தொடா்ந்து உதவி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.