தீக்குளித்து பெண் தற்கொலை
மதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை மாவட்டம், பொதும்பு அருகே உள்ள மிளகரணை கிராமத்தைச் சோ்ந்த ராமு மகள் திருப்பதி (29). இவருக்கும், அப்பன் திருப்பதி அருகே உள்ள வெள்ளியங்குன்றம் புதூரைச் சோ்ந்த வீரணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
வெள்ளியங்குன்றத்தில் உள்ள கணவா் வீட்டில் வசித்து வந்த திருப்பதி, சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].