சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
துக்கியாம்பாளையத்தில் மதிப்புக்கூட்டு கிடங்கு திறப்பு
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டு கிடங்கு மற்றும் காய்கறி விற்பனைக் கடைகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை திறந்துவைத்தாா்.
துக்கியாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மதிப்புக்கூட்டு கிடங்கை, உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஏத்தாப்பூா் எஸ்.ஜெயராமன் பொறுப்பில் வாடகை எடுத்து, விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதென முடிவு செய்யப்பட்டது.
வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டும் பால் குளிரூட்டி, எண்ணெய் செக்கு உள்ளிட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இந்த கிடங்கு மற்றும் காய்கறிகள், சிறுதானியங்கள் நேரடி விற்பனைக் கடைகள் உள்ளிட்ட சந்தையை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திறந்துவைத்து, அரசின் பல்வேறு உழவா் நலத் திட்டங்கள், அரசு மானியங்கள் மற்றும் விவசாயத்துக்கு பயன்படும் புதிய கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.
இதில், வேளாண் விற்பனை துணை இயக்குநா் சுஜாதா, செயலாளா் சுரேஷ்பாபு, பொறியாளா் ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கமலம், துக்கியாம்பாளையம் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.