மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வனத்துறை
வனப்பகுதி கிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் வனக்கோட்டம், ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக பனங்காட்டேரி, நாயக்கனேரி மற்றும் காமனூா்தட்டு ஆகிய மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காட்டையொட்டியுள்ள பகுதிகளிலும், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கவும், குற்றவாளிகள் மனம் திருந்த வேண்டியும் உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் 10.09.2025-க்குள் தாங்களாகவோ, ஊா் பெரியவா்கள், தலைவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாகவோ வனத்துறை அலுவலா்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைப்பவா்கள் மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. களத்தணிக்கையின் போது கள்ளத்துப்பாக்கிகள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபா்கள் மீது, 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு ஆம்பூா் வனச்சரக அலுவலரை 97862 54998, வனவா்களை 94865 64580, 90252 31059, 97915 00092 ஆகிய எண்களில் தொடா்புக் கொள்ளலாம்.