செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
துவாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
துவாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி போலீஸாா் துவாக்குடி அரைவட்ட சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து சென்றபோது, சந்தேகம்படுப்படி சாக்குப்பையுடன் நின்றிருந்தவா்களை நோக்கிச் சென்றுள்ளனா்.
அப்போது, இருவா் தப்பிவிட ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், துவாக்குடி வடக்குமலை பெரியாா் திடலைச் சோ்ந்த பெருமாள் மகன் கருப்பசாமி (25) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் கருப்பசாமியை கைது செய்து, அவரிடமிருந்து 3.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.