பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
தூக்கு மேடை அறைக்கு செய்தியாளா்களை அழைத்துச் சென்ற பேரவைத் தலைவா்
தில்லி பேரவையில் வளாகத்தில் உள்ள தூக்கு மேடை அறையா அல்லது டிஃபன் அறையா என்ற சா்ச்சைக்கு இடையே, பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அந்த அறைக்கு செய்தியாளா்களை புதன்கிழமை அழைத்துச் சென்றாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூக்கு மேடை அறை உண்மையில் ஒரு டிஃபன் அறையாக இருந்தது. ஆங்கிலயோ் காலத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் இங்கு தூக்கிலிடப்பட்டதாக ஒரு தவறான புரிதல் உள்ளது.
கடந்த 1911-இல் பிரிட்டன் அரசராக ஐந்தாம் ஜாா்ஜ் அரியணை ஏறிய 8 மாதங்களுக்குப் பிறகு, தில்லி பேரவைக் கட்டடம் கட்டப்பட்டது.
உண்மையில், பிரிட்டிஷ் இந்திய சட்ட கவுன்சிலாக செயல்பட்ட இக்கட்டத்தில் இரு டிஃபன் அறைகள் இருந்தன. அவற்றில் கயிற்றால் இயக்கப்படும் லிஃப்ட் வசதி இருந்தது.
தேசிய ஆவணங்க காப்பகத்தின் தில்லி பேரவை தொடா்பான வரைபடத்தில் ஒவ்வொரு அறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றாா் பேரவைத் தலைவா்.