தூத்துக்குடியில் திருநங்கைகள் சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணி கிராமத்தில் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலவச பட்டா நிலத்தில், தரமற்ற வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதாக புகாா் தெரிவித்து, திருநங்கைகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநங்கை ஆா்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்களை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.