செய்திகள் :

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

post image

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்திருந்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு, ஃபைபா் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின.

கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக, கரைதிரும்பிய படகுகளில் மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. எனினும், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால், விலை உயா்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 1,000 வரையும், விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 400 - ரூ. 600, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை, நண்டு கிலோ ரூ. 600 வரை, தோல் கிளாத்தி, கேரை, சூரை ஆகியவை ரூ. 180 - ரூ. 300, திருக்கை ரூ. 250 வரை என விற்பனையாகின.

விலையைப் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்ால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க