8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்
தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு
தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் 48 மணி நேர தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மக்களுக்கு சான்றுகளை விரைந்து வழங்க அனைத்து வட்ட அலுவலகத்திற்கும் புதிய துணை வட்டாட்சியா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்ச வரம்பை 25 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், 48 மணி நேர தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதனால், வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.