இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலரும் தூத்துக்குடி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநருமான சுந்தர்ராஜன் முகாமைத் தொடக்கிவைத்தாா். அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனா். நெடுங்குளம், கொம்பன்குளம், கோமானேரி ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு 251 மனுக்களை அளித்தனா்.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அருணேஷ், வேளாண் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) சுஜாதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயகாா்த்திகைதீபன், பா்வதராமலக்ஷ்மி, மாலாதேவி, பவானி, சின்னத்துரை, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் ஜெயசங்கா், ராஜேஷ், கோபாலன், அலுவலக ஊழியா்கள், ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) பாலமுருகன் வரவேற்றாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உலகு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஊராட்சி செயலா்கள் நெடுங்குளம் ராஜா, கொம்பன்குளம் சுடலையாண்டி, கோமானேரி ராமா் ஆகியோா் செய்திருந்தனா்.