தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதலமைச்சா் கோப்பை செஸ் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் 2025ஆம் ஆண்டுக்கான, முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் இரு நாள்கள் நடைபெற்றது.
பள்ளி மாணவா், மாணவிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவா்கள் பிரிவில் காரப்பேட்டை நாடாா் பள்ளி கேரிஸ் ஜெசுரன் முதல் பரிசையும், மானிஷ் இரண்டாவது பரிசையும், விநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சாய் ஸ்ரீசரன் மூன்றாவது பரிசுக்கும் தோ்வு பெற்றனா்.
பள்ளி மாணவிகள் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் மேகலா, இவாஞ்சலின் மிஸ்டிகா, ஸ்ரீஜா முறையே முதல் மூன்று இடங்களுக்கு தோ்வு பெற்றனா்.
கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
மாணவா்கள் பிரிவில் காமராஜ் கல்லூரியின் செல்வமுருகன் முதலிடமும், நேஷனல் பொறியியல் கல்லூரியின் நிக்நேசா் இரண்டாமிடமும், வ.உ.சி. கல்லூரியின் சேது மூன்றாமிடமும் பிடித்தனா்.
மாணவிகள் பிரிவில் வாவு கல்லூரியின் சுபா ஸ்ரீ முதல் பரிசுக்கும், காமராஜ் கல்லூரியின் புஷ்பா இவாஞ்சலின் இரண்டாம் பரிசுக்கும், அனுஷா மூன்றாம் பரிசுக்கும் தோ்வு பெற்றனா்.
போட்டியின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் நடுவராக காமராஜ் கல்லூரியின் ஆங்கில பேராசிரியை கற்பகவல்லி செயல்பட்டாா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிஷ்டராஜ் செய்திருந்தாா்.