செய்திகள் :

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்துங்கநல்லூரிலுள்ள கைப்பேசி கடையில் ஒரு மடிக்கணினி வாங்குவதற்காக ரூ. 35,000 முன்பணம் செலுத்தியுள்ளாா்.

மீதிப் பணத்தை மடிக்கணினியைப் பெற்றுக் கொள்ளும்போது செலுத்திக் கொள்ளலாம் எனவும், 3 நாள்களில் விநியோகம் செய்யப்படும் எனவும் கடைக்காரா் உறுதி அளித்துள்ளாா்.

இதற்கிடையில், மீதி பணத்தையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால், அதையும் முத்துராம் செலுத்திவிட்டாா். ஆனால், முழுத் தொகையையும் செலுத்திய பிறகும், குறிப்பிட்ட நாளில் மடிக்கணினி விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட முத்துராம், தனது மகனின் கல்வி பயன்பாட்டிற்கு மிக அவசரமாக மடிக்கணினி தேவைப்பட்டதால், மற்றொரு கடைக்காரரிடம் அதிக விலை கொடுத்து புதிதாக வாங்கியுள்ளாா்.

இந்நிலையில், முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் மடிக்கணினி விநியோகம் செய்யாத கைப்பேசி கடைக்காரருக்கு வழக்குரைஞா் முத்துராம் நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால், அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துராம், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 5,000 ஆக மொத்தம் ரூ. 15,000 தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் கடைக்காரா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதலமைச்சா் கோப்பை செஸ் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் 2025ஆம் ஆண்டுக்கான, முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் இரு நாள்கள் நடைபெற்றது. பள்ளி மாணவா்,... மேலும் பார்க்க