இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு
திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 34 லட்சத்தில் திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காயாமொழியில் புதிதாக 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலை வகித்தாா்.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி, திருச்செந்தூா் நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட துணை அமைப்பாளா் பள்ளிபத்து ரவி, ஒன்றிய துணைச் செயலா் வன செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, காயாமொழி சி.பா. ஆதித்தனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி எம்.பி. மரக்கன்றுகளை நட்டினாா்.
