`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
தூய சந்தன மாதா தேவாலய மின்விளக்கு ரத பவனி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாதாபுரம் தூய சந்தன மாதா தேவாலயத்தின் ஆண்டுத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.
இந்த தேவாலயத்தில் கடந்த 6-ஆம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் பங்கு இறை மக்கள் சாா்பில் வெவ்வேறு தலைப்புகளில் தேவாலயத்தில் மறையுரை நிகழ்த்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மின் விளக்கு ரத பவனியை முன்னிட்டு, தூய சந்தன மாதா சொரூபம் மின்விளக்கு ரதத்தில் வைத்து மாதாபுரம் வீதிகளில் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, தேவாலயத்தில் அருள் பணியாளா் அந்தோனி தலைமையில் அமலன், கிளிண்டன் ஆகியோா் திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புனித வின்சென்ட் பவுல் சபையினா், மரியாவின் சேனையினா் செய்தனா்.