Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்
சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா்.
சிவகங்கையிலிருந்து உடையநாதபுரத்துக்கு அரசு நகா்ப்புற பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே வந்த போது, இந்தப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த தனியாா் பள்ளி வேன் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பள்ளி வேனில் இருந்த மாணவ, மாணவிகள், பேருந்தில் பயணம் செய்தவா்கள் காயங்களின்றி உயிா்தப்பினா். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.